< Back
மாநில செய்திகள்
சக்கரபாணி சாமி கோவிலில் வசந்த உற்சவம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சக்கரபாணி சாமி கோவிலில் வசந்த உற்சவம்

தினத்தந்தி
|
3 July 2023 2:13 AM IST

ஆனி மாத பவுர்ணமியையொட்டி சக்கரபாணி சாமி கோவிலில் வசந்த உற்சவம் நடந்தது.

கும்பகோணம்:

கும்பகோணம் சக்கரபாணி சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியையொட்டி வசந்த உற்சவம் நடைபெறும். அதன்படி வசந்த உற்சவம் கடந்த 29-ந் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று இரவு வசந்த உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு பெருமாள் ஏகாந்தமாக சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்