< Back
மாநில செய்திகள்
ரேணுகாம்பாள் கோவிலில் வருஷாபிஷேக விழா
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ரேணுகாம்பாள் கோவிலில் வருஷாபிஷேக விழா

தினத்தந்தி
|
27 Jan 2023 10:14 PM IST

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு ஆனதை தொடர்ந்து வருஷாபிஷேக யாக பூஜை இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

ஹோமம், கலசபூஜை முடிந்த பின்னர், புனித நீர் அம்மனுக்கும், சோமநாதீஸ்வரருக்கும் அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. யாகபூஜைகளை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்