< Back
மாநில செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேகம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேகம்

தினத்தந்தி
|
26 Jun 2023 1:35 AM IST

பாளையங்கோட்டை கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

பாளையங்கோட்டை சீனிவாசநகரில் உள்ள கற்பகவிநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு விநாயகருக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. காலை 10-15 மணிக்கு விமானத்திற்கும், கற்பக விநாயகருக்கும் புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மகாஅபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்