< Back
மாநில செய்திகள்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
6 Nov 2022 2:19 AM IST

செட்டிகுளத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே செட்டிகுளம் பஞ்சாயத்து ஸ்ரீரங்கநாராயணபுரம் நாராயண தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், மருத்துவ முகாம்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. மேலும் கலைஞர் பெண்களின் கல்வி முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். பெண்கள் பட்டப்படிப்பு முடித்தால் 50 ஆயிரம் ரூபாய் வரை திருமண உதவி தொகை வழங்கி ஊக்குவித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வருகிறார்.

நான் சபாநாயகராக இருப்பதால் மிகவும் உயரத்தில் இருப்பதாக கருதவில்லை. நான் சாதாரண சாமானியன் தான். என்னை எப்போது எங்கு வேண்டுமென்றாலும் மக்கள் எளிதில் சந்திக்கலாம் என்றார்.

முகாமில் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்