திருநெல்வேலி
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
|திசையன்விளை அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தமிழக அரசு மருத்துவ துறைக்கு வழிகாட்டியாக உள்ளது. இந்தியாவிலேயே மருத்துவ துறையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டனர். அவர்கள் சேவை பாராட்டுக்குறியது' என்றார்.
முன்னதாக மிக்கேல் நகர், தரகன்காடு, தெற்கு புலிமான் குளம், பெருங்கனாங்குளம், தோட்டாவிளை கிராமங்களில் ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பஞ்சாயத்து தலைவர்கள் அனிதா பிரின்ஸ் (குமாரபுரம்) சற்குணராஜ் (குட்டம்), ராதிகா சரவணக்குமார் (நவ்வலடி) மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* ராதாபுரம் யூனியன் சிதம்பரபுரம் பஞ்சாயத்தில் புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் திறப்பு, அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொங்குதல் போன்ற நலத்திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகை தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பஞ்சாயத்து தலைவர்கள் பேபி முருகன் (சிதம்பரபுரம்), பொன் மீனாட்சி அரவிந்தன் (ராதாபுரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.