< Back
மாநில செய்திகள்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
30 July 2023 12:15 AM IST

தட்டார்மடம் அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே கடாட்சபுரம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் திட்ட விளக்க உரையாற்றினார். டாக்டர்கள் ஸ்வீட்லின் சசிதா, அட்ச்சரா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் ஊட்டச்சத்து காய்கறி கண்காட்சி, டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, காசநோய் கண்காட்சி ஆகிய கண்காட்சியை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். முதலூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் சுபாஷ், சுகாதார ஆய்வாளர்கள் மந்திரராஜன், ஜெயபால், கிராம சுகாதார செவிலியர் முத்துவிஜயா உள்பட ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்