சென்னை பனையூர்: ரசிகர்களுடனான நடிகர் விஜய்-யின் சந்திப்பு நிறைவு
|வாரிசு படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் பரவும் நிலையில் சென்னை பனையூரில் நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார்.
சென்னை,
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது.
இந்தநிலையில், சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டதாக தெரிகிறது.