< Back
மாநில செய்திகள்
காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள்

தினத்தந்தி
|
30 Sept 2023 3:34 AM IST

காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

காரியாபட்டி,

காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தெருவிளக்கு வசதி

காரியாபட்டி பேரூராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி செய்யப்படாமல் இருந்தது. ஆதலால் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காரியாபட்டி பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் தெரு விளக்கு அமைக்க பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி 450 புதிய தெருவிளக்குகள் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

நிதி ஒதுக்கீடு

அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றோம். மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த பஸ்நிலையம் விரிவாக்கம், மழைநீர் வடிகால், பேவர் பிளாக் சாலை போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. காரியாபட்டி விரிவாக்கப் பகுதிகளில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட தெருவிளக்கு வசதி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.

நடவடிக்கை

பொதுமக்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகளை இனிவரும் காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பேரூராட்சி துணைத்தலைவர் ரூபி, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட விவசாய தொழிலாளரணி தலைவர் தங்கப்பாண்டியன், துணைத்தலைவர் கல்யாணி, மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் லியாகத் அலி, முனீஸ்வரி, சங்கரேஸ்வரன், முகமது முஸ்தபா வசந்தா, தீபா, சரஸ்வதி, செல்வராஜ், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்