< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்

தினத்தந்தி
|
3 Sept 2023 12:15 AM IST

மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் காந்திப் பேரவை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் ஆகிய போட்டிகளுக்கான இறுதி சுற்று போட்டி ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்