< Back
மாநில செய்திகள்
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
26 Aug 2022 7:00 PM GMT

தேன்கனிக்கோட்டையில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டையில் எம்.ஜி.ரோடு மற்றும் நேதாஜி ரோடு சந்திப்பில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் கலச பூஜை, மூலமந்திர மகா கணபதி ஹோமம் மற்றும் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9.15 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்