< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்
|17 Oct 2022 12:00 AM IST
வரதராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புன்செய்தோட்டக்குறிச்சி அருகே சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அதன் பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மலர்கள் தூவி, கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், பூ பந்து விளையாடும் நிகழ்ச்சியும்நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.