< Back
மாநில செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
19 May 2022 8:55 PM IST

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள், பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். திரளான பக்தர்கள், உபயதாரர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் அருகில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.

அதேபோல் ஆற்காடு தோப்பு கங்காதர ஈஸ்வரர் வரதராஜப்பெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பஜனை குழுவினரின் பாடல்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் அருகில் நின்றது. தேரோட்டத்தில் பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

---2 காலம்

Image1 File Name : 10686501.jpg

---

Image2 File Name : 10686502.jpg

----

Reporter : R. VENKATESAN Location : Vellore - ARCOT

Related Tags :
மேலும் செய்திகள்