ராணிப்பேட்டை
வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
|ஆற்காடு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 30-ந் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. பின்னர் தேரில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வைக்கப்பட்டது. கோவில் எதிரில் இருந்த புறப்பட்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் நிலை நிறுத்தப்பட்டது.
அதேபோல் தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை யொட்டி தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.