< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
|18 Oct 2023 3:00 AM IST
வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கம் சார்பில் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி அருகே மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமி உள்ளிட்ட வருவாய்த்துறையினரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடைய நபர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.