கணவர் இறப்பு சான்றிதழ் கோரி வந்த விதவைப்பெண்ணிடம் வி.ஏ.ஓ ஆபாச பேச்சு - பரவும் ஆடியோ
|கணவரின் இறப்பு சான்றிதழில் கையெழுத்து வாங்க வந்த விதவைப்பெண்ணிடம், ஆசைக்கு இணங்கினால் தான் கையெழுத்து போடுவேன் என்று அடம் பிடித்த விஏஓ மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர்,
கணவரின் இறப்பு சான்றிதழில் கையெழுத்து வாங்க வந்த விதவைப்பெண்ணிடம், ஆசைக்கு இணங்கினால் தான் கையெழுத்து போடுவேன் என்று அடம் பிடித்த விஏஓ மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், தனது கணவர் பெயரில் உள்ள காலிமனையை விற்க முயன்றுள்ளார்.
கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதை திருத்தம் செய்ய வேண்டி 47 வயதான அந்த பெண், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இது சம்பந்தமாக விஏஓ வெங்கடாசலத்தை பார்க்க சென்றபோது, வீட்டிற்கு அழைத்து வெங்கடாசலம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கையொப்பம் வாங்காமல் அந்தப்பெண் திரும்பி வந்துவிட்டார்.
இந்த நிலையில் இறப்புச்சான்றிதழில் கையொப்பம் கேட்ட போது தனிமையில் வீட்டிற்கு வந்து ஆசைக்கு இணங்கினால் தான் கையெழுத்துபோடுவேன் என்று செல்போனில் வி.ஏ.ஓ. வெங்கடாசலம் சபலத்துடன் பேசி அடம் பிடித்த ஆடியோ அம்பலமாகி உள்ளது.ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வீட்டில் பல்லு கூட விலக்காமல் படுத்து கிடந்த வி.ஏ.ஓ வெங்கடாசலம், அந்த பெண்ணிடம் ஒரு மாதம் ஆபீசுக்கு வரமாட்டேன் என்றும் நான் மட்டும் தான் கையொப்பமிட வேண்டும் என்றும் அழிச்சாட்டியம் செய்துள்ளார்.
விஏஓ வின் சபல பேச்சும், பாலியல் தொந்தரவும் தொடர்ந்ததால், அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.விஏஓ வெங்கடாசலம் முன்னாள் ராணுவ வீரர் என்பதால், அவர் வீட்டில் படுத்துக் கொண்டு பணிக்கு வராமல் மது அருந்தி பொழுதை கழிப்பதாகவும், ஆதரவற்ற பெண்களை தனது ஆசைக்கு இணங்குமாறு நெருக்கடி கொடுப்பதாகவும், ஆடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என்றும் அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்.