< Back
மாநில செய்திகள்
காசிமேட்டில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
சென்னை
மாநில செய்திகள்

காசிமேட்டில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

தினத்தந்தி
|
8 May 2023 11:47 AM IST

காசிமேட்டில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

மீன்பிடி தடை காலத்தால் பெரிய விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் சிறிய பைபர் படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பெரிய வகை மீன்கள் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பெரிய வகையான வஞ்சிரம், கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்களின் விலை நேற்று அதிகமாக இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.2 ஆயிரம் வரையிலும், சங்கரா, இறால், கிழங்கா உள்ளிட்ட மீன்கள் ரூ.500 வரையிலும், கொடுவா, பாறை, ஷீலா உள்ளிட்ட மீன்கள் ரூ.600 வரையிலும் விற்பனையானது. ஆனாலும் விலையை பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான மீன்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்

மேலும் செய்திகள்