தூத்துக்குடி
வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிப்பு
|கோவில்பட்டியில் வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம் இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் சார்பாக நடைபெற்றது. அபிராமி முருகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ மற்றும் முனைவர் சம்பத்குமார் ஆகியோா் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் அவ்வையார் செல்வம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நிறுவனர் நாஞ்சில் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் லட்சுமணன், நடராஜபுரம் தெரு மக்கள் நலச்சங்க தலைவர் செண்பகம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மேரிஷீலா, பகத்சிங் ரத்த தான கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், பறையர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தாவீது ராஜா, வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.