வந்தே பாரத் ரயிலா, வந்தே 'இந்தி' ரயிலா?" - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்
|இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
மதுரை,
சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 8 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு எதிர்பார்ப்புகள் நிலவும் நிலையில், ரயிலில் இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடெசன் எம்.பி விமர்சனம் செய்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வந்தே பாரத் ரயிலா? வந்தே "இந்தி" ரயிலா? சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரெயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு.இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க" என்று அவர் பதிவிட்டுள்ளார்.