< Back
மாநில செய்திகள்
மதுரைக்கு விரைவில் வந்தே பாரத் ரெயில் - ஏற்பாடுகள் தீவிரம்
மாநில செய்திகள்

மதுரைக்கு விரைவில் 'வந்தே பாரத்' ரெயில் - ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
5 April 2023 10:35 PM IST

‘வந்தே பாரத்’ ரயிலை, மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும், ரெயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

மதுரை,

தென்னக ரெயில்வேயில் சென்னை-மைசூரு இடையே 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 8-ந் தேதி சென்னை-கோவை வந்தேபாரத் ரெயில் சேவை தொடங்க உள்ளது. ஆனால், தென்மாவட்ட பயணிகள் சென்னை-கன்னியாகுமரி இடையே 'வந்தே பாரத்' ரெயில் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விரைவில் மதுரைக்கும், 'வந்தே பாரத்' ரெயிலை இயக்கும் வகையில், முன்னேற்பாடுகளை தெற்கு ரெயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி 'வந்தே பாரத்' ரயிலை, மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்காகவும், ரெயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

மதுரை ரெயில் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது நடைமேடை முழுவதும் மின்மயமாக்கம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.73 லட்சத்து 17 ஆயிரத்து 22 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் டெண்டர் இறுதிசெய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்