< Back
மாநில செய்திகள்
சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் வெள்ளோட்டம்..!
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் வெள்ளோட்டம்..!

தினத்தந்தி
|
30 March 2023 9:20 AM IST

சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் வெள்ளோட்டம் நடைபெற்றது.

சென்னை,

நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரெயில் பல மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரெயில் தற்போது கோவை சென்றடைந்தது. வெள்ளோட்ட பயணத்தில் ரெயிலின் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல்-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இது 11-வது ரெயில் சேவை ஆகும்.

மேலும் செய்திகள்