11-ந்தேதி முதல் கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
|வரும் 11-ந்தேதி முதல் கோவை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
கோவை - பெங்களூரு (வண்டி எண்.20641) மற்றும் பெங்களூரு - கோவை (20642) இடையே செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் வரும் 11-ந்தேதி முதல் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் வரும் 11-ந்தேதி முதல் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, கோவையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, பெங்களூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வரும் வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பெங்களூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு கோவை வந்தடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.