< Back
மாநில செய்திகள்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
3 July 2024 9:30 PM IST

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை எழும்பூரில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மற்றும் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்