சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
|சென்னை,
பயணிகளின் வசதிக்காவும், கோடை காலத்தை முன்னிட்டும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (5-ந் தேதி) 6,7,12,13,14,19,20,21,26,27 மற்றும் 28 ஆகிய தேதிகளில்(வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகா்கோவில் செல்லும் வந்தேபாரத் ரெயில் (வண்டி எண்-06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நாளை (5-ந் தேதி) 6,7,12,13,14,19,20,21,26,27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தேபாரத் ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.