< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல் - கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
மாநில செய்திகள்

சென்னை சென்டிரல் - கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
23 Dec 2023 2:46 PM IST

வருகிற 25-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்டிரல் - கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரெயிலானது, வருகிற 25-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும் என்றும், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வருகிற 25-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்