< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
|25 Sept 2023 10:31 AM IST
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
நெல்லை-சென்னை, சென்னை-விஜயவாடா இடையே இரண்டு புதிய ரெயில்கள் உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் பயண நேரம் தற்போது 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.