< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலி

தினத்தந்தி
|
3 April 2023 4:34 PM IST

திருவள்ளூர் அருகே ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மைசூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்