வந்தே பாரத் ரெயில்களை 14 நிமிடத்தில் தூய்மை செய்து சாதனை
|வந்தே பாரத் ரெயில்களை 14 நிமிடத்தில் தூய்மை செய்து ரயில்வே ஊழியர்கள் சாதனை படைத்தனர்.
சென்னை,
குப்பையில்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இன்று தெற்கு ரெயில்வேக்குள்பட்ட ரெயில் நிலையங்களில் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் 3 வந்தே பாரத் ரெயில்களை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த 14 நிமிடத்துக்குள் தூய்மை செய்து சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி, கோவையிலிருந்து சென்னை சென்டிரலுக்கு காலை 11.50 மணிக்கு வந்த வந்தே பாரத் ரெயில், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடுக்கு பகல் 1.20 மணிக்கு வந்த வந்தே பாரத் ரெயில் ஆகியவற்றை 14 நிமிடத்துக்குள் ஊழியர்கள் தூய்மை செய்து சாதனை படைத்துள்ளனர்.
இத்திட்டம் ஜப்பானின் புல்லட் ரெயில் தூய்மையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் ரெயில் சேவையின் ஒட்டுமொத்த செயல்திறன் அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.