< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு

25 May 2024 8:11 PM IST
கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.
சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.
எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை (மே.28) அன்று வழக்கம் போல் பூங்கா திறந்திருக்கும். வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.