< Back
மாநில செய்திகள்
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் - பூங்கா நிர்வாகம் தகவல்

தினத்தந்தி
|
28 Aug 2023 12:37 PM IST

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு ஆக.29ம் தேதி செவ்வாய் அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2800-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். வழக்கமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். ஆனால் நாளை (செவ்வாய்க்கிழமை) அன்று ஓணம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்து இருக்கும் என்று பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்