< Back
மாநில செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
10 Oct 2023 2:48 PM IST

வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் ரூ.90-ல் இருந்து ரூ.200-ஆக உயர்த்தப்பட்டதை கண்டித்தும், பூங்காவை தனி நிர்வாகமாக மாற்றும் தமிழக அரசின் போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மற்றும் பாட்டாளி வர்க்க சமரன் அணி ஆகியோர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வண்டலூர் பூங்கா எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இரணியப்பன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்