< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மாங்காய் ஏற்றி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்தது
|7 Jun 2022 9:35 PM IST
கிருஷ்ணகிரியில் மாங்காய் ஏற்றி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்தது. இதனால் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் மேம்பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த மாங்காய்கள் சாலையில் கொட்டியது. அதை அந்த வழியாக சென்றவர்கள் பைகளில் எடுத்து சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அங்கு சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.