< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

தினத்தந்தி
|
2 March 2023 8:21 PM IST

திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பாபு (வயது 26). இவர் வேன் டிரைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை எடையாத்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள முடையூர் பகுதி அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக பாபு சென்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாபு, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்