< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
27 May 2023 2:32 PM IST

காஞ்சீபுரம் அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் கண்ணன் (40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக காஞ்சீபுரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பாலாறு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி கண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஆம்னி வேனில் முன் பகுதி முழுவதும் நசுங்கிய நிலையில் வேனை ஓட்டி வந்த பெருமாள் வேனில் சிக்கி உயிருக்கு போராடினார். உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து வந்து, கடப்பாரை கொண்டு ஆம்னி வேன் முன் பக்கத்தை நெம்பி படுகாயம் அடைந்த வேன் டிரைவர் பெருமாளை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்