< Back
மாநில செய்திகள்
குன்றத்தூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற வேன் விபத்து- 10 பக்தர்கள் காயம்
மாநில செய்திகள்

குன்றத்தூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற வேன் விபத்து- 10 பக்தர்கள் காயம்

தினத்தந்தி
|
8 Jan 2023 9:23 AM IST

குன்றத்தூரில் இருந்து சபரிமலைக்கு 20 பக்தர்களுடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.

விழுப்புரம்,

சென்னையில் இருந்து சபரிமலைக்கு 20 ஐயப்ப பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் வேன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்துகொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்