< Back
மாநில செய்திகள்
லாரி மீது வேன் மோதி ஒருவர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

லாரி மீது வேன் மோதி ஒருவர் பலி

தினத்தந்தி
|
7 Oct 2023 2:17 AM IST

நெல்லையில் லாரி மீது வேன் மோதி ஒருவர் பலியானார்.

மதுரை திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வேன் மூலம் மருந்து, மாத்திரைகளை ஆஸ்பத்திரி மற்றும் மெடிக்கல் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மருந்துகளை வினியோகம் செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வேனில் மதுரைக்கு திரும்பினார். வேனை சுரேசின் உறவினர் சதீஷ்குமார் (25) ஓட்டி வந்தார்.

நாகர்கோவில் -நெல்லை நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி மலை பகுதியில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த லாரி நின்றதால் பின்னால் வந்துகொண்டிருந்த வேன், லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்