< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் வேன் தீப்பிடித்து சேதம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் வேன் தீப்பிடித்து சேதம்

தினத்தந்தி
|
1 July 2022 2:38 PM IST

காஞ்சீபுரத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது.

காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலையை சேர்ந்தவர் மோகன். பூ வியாபாரியான மோகன் தனது வியாபாரத்திற்காக வேன் வைத்திருந்தார். வேனை தினந்தோறும் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

கடந்த ஒரு வார காலமாக வேனை இயக்காத நிலையில், நேற்று காலை வேன் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்