< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வள்ளி திருமணம் நாடகம்
|27 May 2023 1:07 AM IST
வள்ளி திருமணம் நாடகம்
தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடகக் கலைவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி பிரகலாதா சரித்திரம் நாடகமும், பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து அரிச்சந்திரா முதல்பாகம் நாடகமும், அரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகமும் நடைபெற்றது. விழாவில் நேற்று இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானவர்கள் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குனர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.