< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
காதலர் தினத்தில் போலீஸ் கெடுபிடி:செஞ்சி கோட்டைக்கு காதல் ஜோடி வருகை குறைந்தது
|15 Feb 2023 12:15 AM IST
காதலர் தினத்தில் போலீஸ் கெடுபிடியால் செஞ்சி கோட்டைக்கு காதல் ஜோடி வருகை குறைந்தது.
செஞ்சி,
உலகெங்கும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நாளில் காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கி கொண்டாடினர். அந்த வகையில், செஞ்சி கோட்டைக்கும் நேற்று காதல் ஜோடிகள் வருகை தந்திருந்தனர்.
ஆனால், செஞ்சி கோட்டையில் நேற்று போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது. இதனால் இங்கு காதல் ஜோடி கள் வருகை வழக்கத்தை விட நேற்று குறைந்து காணப்பட்டது. அவர்கள் கோட்டை பகுதியை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இதில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியினரும் அதிகளவில் வருகை தந்திருந்ததை பார்க்க முடிந்தது.
முன்னதாக செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் மற்றும் செஞ்சிக்கோட்டை பாதுகாப்பு அலுவலர் நவீந்திர ரெட்டி மேற்பார்வையில் கோட்டை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.