< Back
மாநில செய்திகள்
வளர்பிறை சஷ்டி தினம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மாநில செய்திகள்

வளர்பிறை சஷ்டி தினம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
23 July 2023 10:43 PM IST

வளர்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தனர்.

தூத்துக்குடி,

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சிறப்பு பூஜை நடைபெறும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் வளர்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தனர். திருச்செந்தூர் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.



மேலும் செய்திகள்