< Back
மாநில செய்திகள்
வையாபுரி நவகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வையாபுரி நவகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
15 April 2023 6:46 PM GMT

வையாபுரி நவகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே வையாபுரி நவகுடி கண்மாயில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகாலையிலேயே கண்மாயில் திரண்டனர். பின்னர் ஊர் பெரியவர்கள் வெள்ளை துண்டுகளை அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். அதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ஜிலேபி, அயிரை, கெண்டை, சில்வர் கெண்டை ஆகிய மீன்கள் கிடைத்தன. தூரி என்ற மீன்பிடி உபகரணத்தை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இது போன்று பாரம்பரியம் மிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்