வைகுண்ட ஏகாதசி திருவிழா: திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!
|வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு 2-ந் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும். ஆயினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 7-ந் தேதி(சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.