< Back
மாநில செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ..!
மாநில செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ..!

தினத்தந்தி
|
2 Oct 2022 5:15 PM IST

சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 96 வயதாகும் அவர் நேற்று காலை முதல் காய்ச்சலால் சிரமப்பட்டு வந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைந்து குணமடைய தமிழக அரசியல் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நல்லகண்ணுவுக்கு 2022ம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருது சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனைக்குச் சென்று, நல்லகண்ணுவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். நல்லகண்ணு நலமாக உள்ளதாக வைகோ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்