< Back
மாநில செய்திகள்
வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
மாநில செய்திகள்

வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
12 Jun 2022 1:55 PM IST

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் பகலில் தங்க சப்பரத்தில், கோவிலின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதரை பக்தர்களுக்கு தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் வைகாசி விசாகத்தின் 10-வது நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜை, அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி வைகாசி விசாக திருவிழா நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் கடற்கரையிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனையொட்டி இன்று திருச்செந்தூர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்