< Back
மாநில செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
சேலம்
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

தினத்தந்தி
|
5 Jun 2022 11:34 PM IST

ஆத்தூரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆத்தூர்:

ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் 41-ம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தி அலகு, தேர்அலகு, விமான அலகு உள்ளிட்ட அலகுகள் குத்தி கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்களுடன் அதிர்வேட்டு முழங்க பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். அதேபோல ஏராளமான பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கொண்டு முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ஆத்தூர் பஸ் நிலையம், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, லீ பஜார், காந்தி நகர் உள்பட முக்கிய வீதிகளின் வழியாக வழியாக சென்று கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

அலகு குத்தும் நிகழ்ச்சியை காண, ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்