< Back
மாநில செய்திகள்
சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா

தினத்தந்தி
|
4 Jun 2022 10:56 PM IST

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சோளிங்கர்

சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள பழமையான கனககுஜம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவின் இரண்டாவது நாளில் சோழபுரீ ஸ்வரர், கனககுஜம்பாள், கங்காதேவி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி தங்க கேடயதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்து, பின்னர் சிவன்கோவில் தெரு, அர்ஜூனா ரெட்டி தெரு, வெங்கட்ராயன் பிள்ளைத்தெரு, குட்டைத் தெரு, பஜார் தெரு உள்ளிட்ட 8 மாட வீதிகளில வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், 9-ந் தேதி தேர்த்திருவிழா, 11-ந் தேதி மஹா அதிகார நந்தி வாகனம், 12 ராவனேஸ்வர் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.

மேலும் செய்திகள்