< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நினைவு போட்டிகள்
|1 Sept 2023 3:42 AM IST
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நினைவு போட்டிகள் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நினைவு போட்டிகள் நடைபெற்றது. இதனை கல்லூரியின் முதல்வர் ரமேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இயற்பியல் துணை பேராசிரியர் ராசமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து, பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வரதராசன்பேட்டை மதர் ஞானாம்பாள் கலைக்கல்லூரி, ஆண்டிமடம் செயின்ட் பீட்டர்ஸ் மற்றும் ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்கலை மன்ற பொறுப்பாளர் வடிவேலன் செய்திருந்தார்.