< Back
மாநில செய்திகள்
வைகை விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வைகை விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
21 Oct 2023 1:00 AM IST

ராமநாதபுரத்தில் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ராமநாதபுரத்தில் பூர்வீக வைகை விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வைகை பாசன சங்க செயலாளர் மதுரை வீரன், முல்லை பெரியாறு பாசன சங்க ஆதிமூலம், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் கிருஷ்ணன், நிர்வாகிகள் உகந்தன், ராமநாதன், ராமதாஸ், துரைப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத்தில் விடுபட்ட 96 விவசாய கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரண தொகை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து கால்வாய், கண்மாய்களை தூர்வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்