< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வைகை அணையின் நீர்இருப்பு 45% ஆக சரிவு - குடிநீர் தேவைக்கு மட்டும் அணையின் நீரை பயன்படுத்த முடிவு
|18 Feb 2023 5:10 PM IST
பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழைப்பொழிவு குறைவாக இருந்தது. அதே வேளையில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டது.
இதனால் அணையின் நீர் இருப்பு 45 சதவீதமாக சரிந்துள்ளது. இதையடுத்து அணையில் மீதம் உள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.