< Back
மாநில செய்திகள்
வைத்தியநாத பெருமான் திருக்கல்யாணம்
நாமக்கல்
மாநில செய்திகள்

வைத்தியநாத பெருமான் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
4 July 2022 12:30 AM IST

வைத்தியநாத பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாத பெருமான் கோவில் 15-ம் ஆண்டு விழா, திருக்கல்யாணம் மற்றும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திருமுறை‌ பாராயணம் மற்றும் பேரொளி வழிபாடு ‌‌‌நடந்தது. காலை 10 மணிக்கு திருமுறை வேள்வியும், 12 மணிக்கு தையல் நாயகி உடனுறை வைத்தியநாத பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு அன்னம் பாலித்தலும், மாலை 6 மணிக்கு அடியார்கள் புடைசூழ கைலாய வாத்தியங்களுடன்‌ அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

மேலும் செய்திகள்