< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
வடிவழகி அம்மன் கோவில் குடமுழுக்கு
|6 July 2023 12:15 AM IST
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் கிராமத்தில் உள்ள வடிவழகி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் கிராமத்தில் வடிவழகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி விக்னேஸ்வர பூஜை, நவக்கிரகம் ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாத்ரா தரிசனம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் வடிவழகி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.